இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்தில் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டி, 10 ஆம் தேதி தொடங்குகிறது. இது, அந்த அணிக்கு பயிற்சி ஆட்டமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் முழங்கை காயத்தால் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், அவதியுற்று வருகிறார். இதனால் வரும் 10 ஆம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. முதல் போட்டியில் இடம்பெறாத நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், இரண்டாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
கேன் வில்லியம்சனின் காயம் கண்காணிப்படுகிறது என்றும் அவர் ஆடுவாரா மாட்டாரா என்பது போட்டி நடக்கும் நாளில் காயத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று பயிற்சியாளர் கேரி ஸ்டட் தெரிவித்துள்ளார்.