தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதய்நிதி ஸ்டாலின் முதலமைச்சர் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.




