முதலமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதி கைது!

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, என்.ஆனந்த் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் தஞ்சை காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக தவெக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை கிழக்கு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தஞ்சை கிழக்கு காவல்நிலைய போலீசார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நீலாங்கரைக்கு வந்தனர். அப்போது உதயநிதி வீட்டின் முன்பு குவிந்த திமுகவினர் உதயநிதியை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே எதிர் கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிதத நீதிபதி 12 மணி வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் அரிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலிசார் கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.