முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

2012இல் நடிகர் முதல் 2021இல் திமுக எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை உதயநிதியின் பயணம்!

சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் முதல்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகனாக பரிணமித்தது முதல் இவரின் அரசியல் என்ட்ரி குறித்து பார்ப்போம்.

2008ஆம் ஆண்டு தயாரிப்பாளராக விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படம் தொடங்கி, ஆதவன், மன்மதன் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2012ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா என அடுத்தடுத்து நகைச்சுவை திரைப்படங்களில் நடித்தார். 2020ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்களை தயாரிப்பதிலும் நடிப்பதிலும் தனது முழு நேரத்தை செலவழித்து வந்த உதயநிதி, 2018ஆம் ஆண்டிலிருந்து கட்சி கூட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுவது என கள அரசியலில் ஈடுபட தொடங்கினார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. அதற்குப் பரிசாக திமுகவில் அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பும் வந்துசேர்ந்தது.
இதனிடையே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து, மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி போட்டியிட்ட தொகுதி என்பதால் அப்பகுதியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் உதயநிதி. மறுபுறும் பாஜக சார்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்புவும், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார். ஆனால் அதிமுக, அந்த தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதுதான் அரசியல் களத்தில் பெரும் ட்விஸ்ட்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக தலைவர் மு. கருணாநிதி 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் உதயநிதி, சந்திக்கும் தனது முதல் தேர்தலில் வெற்றி பெறுவரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கிற்கு புதிய கட்டடம்” – திருமாவளவன் எம்.பி கோரிக்கை

G SaravanaKumar

அக்னிபாத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது – அர்ஜுன் சம்பத்

EZHILARASAN D

குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது ஆளுநர்கள் மாநாடு

Halley Karthik