கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதலமைச்சரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா? என்று உதயநிதி ஸ்டலின் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, கர்நாடக அரசால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு விவரங்கள் வெளியே வந்துள்ளது. அதில் அவர்கள் கொடூரமாக, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேல்மட்ட நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும், இது தொடர்பாக அந்த மாநில முதலமைச்சரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா?. மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவர்களுடைய குடும்பத்துடன் துணை நிற்க வேண்டும். அந்த குடும்பங்களுக்கு போதுமான நிதி உதவிகள் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.