மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ காரை தீயணைப்பு வாகனம் கழுவியதால் சர்ச்சை!

மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் சொந்த காரைக் கழுவுவதற்காக, தீயணைப்புப் படை வாகனம் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், சிங்க்ரவுலி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ராமநிவாஸ் ஷாவின் அரசு இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை, மாநகராட்சி தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து ஊழியர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுமக்களின் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய தீயணைப்பு வாகனத்தை எம்.எல்.ஏ-வின் இன்னோவா கார் கழுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“மக்களுக்கு அவசர நிலை ஏற்படுகையில் தீயணைப்பு வாகனங்கள் வராது, ஆனால் பாஜக எம்.எல்.ஏ-வின் காரைக் கழுவ வாசல் வரை தேடி வருகிறது” என அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் கடுமையாகச் சாடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ ராமநிவாஸ் ஷா, “நான் ஒன்றும் காரைக் கழுவவில்லையே… நான் வீட்டை விட்டு வெளியில் நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருந்தேன். இதன் பின்னணி குறித்து என் டிரைவரிடம் தான் கேட்க வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.