கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!

கேப்டன் விஜயகாந்த் அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவர் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கேப்டன் விஜயகாந்துக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.