கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். இந்த நிலையில ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான பண்டிகையாகும். இப்பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்.
அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான பண்டிகையாகும். இது மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வளர்க்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




