ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து, தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள துர்காபுரம் அருகே சென்ற போது, கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. அந்த பேருந்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்த நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.




