வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ராசிபுரம் தொகுதி தேர்தல் பரப்புரையின்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “ மோடி அரசு 15 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்துவதாகக் கூறியது ஆனால் அதைச் செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு கட்டியது ஒரே ஒரு செங்கல்தான், அதையும் நான் எடுத்து வந்துவிட்டேன். தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் மோடியிடம் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி. ராசிபுரம் மக்கள் பெரிதும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. புறவழிச்சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. பொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்தது அதிமுக நிர்வாகிகள்தான் . ஜெயலலிதா இறந்தது குறித்து இதுவரை உண்மை தெரியவில்லை. திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.’ என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்