கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் நடித்து வெளியான ஓம், பஜரங்கி, மஃப்டி, சிவலிங்கா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ஜெய்லர் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
இதனிடையே சிவராஜ்குமார், ’666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹேமந்த் எம் ராவ் இயக்கும் இப்படத்தில் தனஞ்சயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன், ’666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதனை படத்தின் இயக்குநர் ஹேமந்த் எம் ராவ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் ”குழப்பங்களுக்கு நடுவே சிறகடித்தல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.








