திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டாவும், வேலைவாய்ப்பும் உருவாக்கித் தருவதாகச் செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி அளித்தார்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரத்தினமங்களம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று இரத்தினமங்களம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன் ’நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால் நிச்சயமாக திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.