தேனி: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இருவர் படுகாயம்!

உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு வேலை முடிந்து சென்ற இளைஞர் ஒருவர் இருசக்கர…

உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி பேருந்து நிறுத்தம்
முன்பு வேலை முடிந்து சென்ற இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.  இதனிடையே உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கல்லூரி மாணவர் பரத் என்பவரின் இரு சக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற இளைஞரின் வாகனத்தில் நேருக்கு நேராக மோதியது.  இந்த விபத்தில் கல்லூரி மாணவர் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.  இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த இரண்டு இளைஞர்களுக்கும் காலில் முறிவு ஏற்பட்டு, படுகாயம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

அருகில் இருந்தவர்களும், வாகன ஓட்டிகளும் உடனடியாக இளைஞர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சி வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.