தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தியும் கூட, அணை கட்டுவதற்கான நிலங்களை அதிவேகமாக கையகப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் DK சிவக்குமார். அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.
கர்நாடக காங்கிரஸின் ஆணவமும், தவெக அரசின் அலட்சியமும் கடும் கண்டனத்திற்குரியது. தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தான், கர்நாடகாவை தற்போது ஆள்கிறது. CWMA உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்து விட மறுக்கிறது. தமிழகத்தின் நீராதாரத்தை முற்றிலுமாக தடுக்க முயற்சிக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்க நினைக்கிறது. ஆனாலும் கூட, முதல்வர் விஜய் கர்நாடக காங்கிரஸை ஏன் எதிர்க்க மறுக்கிறார்? ஒருவேளை கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்த்தால், தமிழகத்தில் தனது முதல்வர் பதவி பறிபோய் விடும் என்ற பயமா?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




