முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம் – நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்!

முதலமைச்சர் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கேட்டை மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அதன்படி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் செல்லும் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோடை செல்கிறார். இதனையடுத்து புதுக்கோட்டையில் சுமார் 4 கிலோ மீட்டர் வரை ரோடு ஷோ செல்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பம்ஹ்கேற்று முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை புதுக்கோட்டை நகரில் ரூ. 23 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த அரசு விழா தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டறங்கிற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு விழாவில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் விஜய், 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்.

மேலும், ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பல் நோக்கு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். பின்னர், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.