நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 – இந்திய அணி படுதோல்வி!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5-வது டி20 போட்டியில நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுறுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹேமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சாஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், அபிஷேக் ஷர்மா ஒரே ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து கைகோர்த்த ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் இணை அதிரடியாக ஆடி பந்துகளை நாளாபுறமும் சிதறடித்தனர். இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 ஃபோர்கள் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து வந்த 6 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய நமன் திர் 33 ரன்களிலும், நிதிஷ்குமார் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி சார்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி 18 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து195 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் செரெபர்ட் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். க்ளென் பிலிப்ஸ் 65 ரன்களும், மிட்சல் 29 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை விழ்த்தினர்.

நியூசிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளிலும், நியிசிலாந்து 4 மற்றும் 5-வது போட்டிகளில் வெற்றி பெற்றன. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.