ஜெர்மனியில் ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வந்தது, இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி. சிந்துவும், டென்மார்க்கின் லின் கியர்ஸ்ஃபெல்ட்டும் பல்ப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் டென்மார்க்கின் லின் கியர்ஸ்ஃபெல்ட்டை 21-12, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பி.வி. சிந்து இந்த சீசனில் தனது இரண்டாவது பட்டத்தை வென்று, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். இந்த இந்திய வீராங்கனை, ஜெர்மனியில் தனது ஆதிக்கமிக்க பயணத்தை நேர் செட் வெற்றியுடன் நிறைவு செய்தார்.
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆன் சே யங்கிடம் தோல்வியடைந்து , இரண்டாம் இடத்தைப் பிடித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது . இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இவர், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் ஓபனையும் வென்றிருந்தார். இதன் மூலம், இந்த சீசனில் BWF உலகச் சுற்றுப்பயணத்தில் ஹைலோ ஓபன் தனது இரண்டாவது பட்டமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றி குறித்து பி,வி சிந்து கூறியதாவது, “எதிரணி யாராக இருந்தாலும், எனது 100% பங்களிப்பை வழங்குவது எனக்கு முக்கியமாக இருந்தது. நாங்கள் பலமுறை ஒன்றாக விளையாடியுள்ளோம், அதனால் ஒவ்வொரு புள்ளியிலும் கவனம் செலுத்துவது எனக்கு முக்கியமாக இருந்தது. இது முழு ஆட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒவ்வொரு புள்ளியும் எனக்கு முக்கியமானதாக இருந்தது,” என்று சிந்து கூறினார்.




