அமெரிக்காவின் டெக்சாஸின் ஆஸ்டினிலிருந்து பஹாமாஸுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த லியர்ஜெட் 60 விமானம், தெற்கு புளோரிடா குடியிருப்புப் பகுதிக்குள் செங்குத்தாகப் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனைத்தொடர்ந்து பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகம் மற்றும் உள்ளூர் தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய வர்த்தக விமானத்தில் இருந்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர் என அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி தெரிவித்தார்.
இந்த விமான விபத்துகான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியிலும் ஈட்டுபட்டுள்ளனர்.




