பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிடுவதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி அமமுக என கூறினார்.
தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது எனவும், அதிமுக ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளவில்லை என்றும், நான்கு வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி தராமல் தற்போது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவோம் என்று ஏமாற்றப் பார்க்கிறார்கள் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.
மேலும்,திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் செல்வங்களை பறிகொடுக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.







