பங்களாதேஷ் நாட்டில் அமைந்துள்ள ரொஹிங்கியா அகதிகள் முகாமில்
கடந்த திங்கட்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால்
ஆயிரக்கணக்கான வீடுகளும் குடிசைகளும் கூடாரங்களும்
தீக்கிறையாகியது.
பங்களாதேஷிலுள்ளா காக்ஸ் பஜார் நகரத்தில் பலுகாலி முகாமில்
வசிக்கும் ஒருவர் தீ விபத்து நடந்ததைத் தனது மொபைல் போனில்
வீடியோவாகப் படம்பிடித்து வைத்துள்ளார். மக்கள் எரியும் குடிசைகள்
மற்றும் கூடாரங்களுக்கு இடையில் தங்கள் உடைமைகளைக் கையில்
ஏந்தியவாறு கூச்சலிட்டுக்கொண்டே அங்கும் இங்கும் ஓடுவது போல் அந்த
வீடியோ காட்சியில் பதிவாகியிருந்தது. ரோஹிங்கியா அகதிகள் முகாமில்
மியான்மாரிலிருந்து இடம்பெயர்ந்த 10 லட்சத்திற்கும் அதிகமானோர்
வாழ்ந்து வருகின்றனர் என யு.என். புலனாய்வாளார்கள் தெரிவித்தனர்.

பல குடிசைகளும் மக்களும் தீக்கிறையாகினர். ஆனால் அகதிகளுக்கான
ஐநா சபை அதிகாரிகள் இதனைச் சற்றும் கண்டுகொள்ளவில்லை என்று
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
தீ பரவுவதை முதலில் பார்த்தவர் தாயிபா பேகம். இவர் ”சேவ் தி
சில்டிரன்”என்னும் அமைப்பின் தன்னார்வலர். இவர் கூறுகையில்,
“நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள் நெருப்பு வேகமாகப் பரவி விட்டது.
பெரியவர்களும் குழந்தைகளும் அச்சத்தில் அங்கும் இங்கும்
அலைமோதிக்கொண்டிருந்தனர்”என்றார்.
”ஆயிரக்கணக்கான குடிசைகளும் கூடாரங்களும் எரிந்து சாம்பலாகின”
என்று ரோஹிங்கியாவின் தலைவர் முகமது நக்கீம் ராய்ட்டர்ஸிடம்
கூறினார். “நாங்கள் நெருப்பைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறோம்” என்று பங்களாதேஷ் அரசின் துனை
அலுவலர் முகமது சம்சுது டூசா தெரிவித்துள்ளார்.
”இதுவரை குடியிருப்புகள், சுகாதார மையங்கள் மற்றும் இதர அடிப்படை
வசதிகள் தீயில் சிக்கிச் சேதமடைந்துள்ளன” என்று செய்தித் தொடர்பாளர்
டோனோவன் தகவல் தெரிவித்துள்ளார்.







