திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் சுமார் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கட்டுகடங்காத பக்தர்கள் கூட்டத்தின் நடுவேயும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு நின்ற செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 23 பூச்செரிதலுடன் துவங்கியது.திருவிழாவின் பால்குடவிழா வெகு விமரிசையாக தொடங்கியது.
வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் தலைகளில் பால்குடங்களை சுமந்து மயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க ராஜவீதிகளின் வழியாக உலா வந்த பால்குடம் அம்மன் சன்னிதானத்தை வந்தடைந்தது. மேலும் குழந்தை வரம் வேண்டியிருந்தவர்கள் தங்கள் வேண்டுதல் பலித்ததால் கரும்புத்தொட்டில் கட்டி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 6மணிக்கு தொடங்கிய பால்குடம் மாலை வரை நடைபெற்று வருகிறது.
பால்குட விழாவில் சுமார் இருபத்து ஐந்தாயிரம் பேர் வரை கலந்து
கொண்டனர் என கூறப்படுகிறது.பகதர்கள் கொண்டு வந்த பால்குடங்களில் இருந்து 4 லட்சம் லிட்டர் பால் அம்மனுக்கு அபிஷேகமாக செய்யப்பட்டது.
திருவிழாவின் மைல்கல்லாக ஆர்பரித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவேயும் அனைவரும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு நின்ற செயல் காண்போரை நெகிழ செய்தது.
-வேந்தன்









