டி20 கிரிக்கெட் போட்டிகளில் இனி கோலி,ரோஹித் போன்று அனுபவமுள்ளவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டும் என ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்தார்.
கடைசி இரண்டு ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் தங்களது அபார வெற்றியை நிலைநாட்டி தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இளம் வீரர்களே பெரும்பாலும் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். பத்திரானா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோர் போட்டியின் போக்கை மாற்றி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியாதாவது:
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் தங்களது திறமையை காட்டி வரும் நிலையில் இளம் வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளித்து, தேர்வுக் குழுவினர் இப்போதே அவர்களை தயார் செய்யவேண்டும்.
நம் அனைவரும் ரோகித் சர்மா, விராட் கோலி திறமை குறித்து நன்கு அறிவோம். ஆனால் அவர்களின் அனுபவத்தை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வைத்துக்கொண்டு, டி20 பார்மேட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது இந்திய அணியின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றும் என அவரது கருத்தை தெரிவித்தார்.







