முக்கியச் செய்திகள் இந்தியா

பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு அதிகரிப்பு

நாட்டில் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு முன் எப்போதும்விட தற்போது அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பழங்குடியின மக்கள் வசிக்கும் 176 மாவட்டங்களில் 97 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பத்து லட்சம் பழங்குடியின மக்களில் 2.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

லட்சத்தீவு, இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 86.5% பழங்குடியின மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் 10 லட்சம் மக்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்தி 244 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்களில் 54 சதவீதம் பேருக்கும் பெண்களில் 46 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களில் 53 சதவீத ஆண்களுக்கும் 47 சதவீத பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி; எதற்கு அனுமதியில்லை!

Ezhilarasan

பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா?; குற்றவாளியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி

Saravana Kumar

புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் மாணவி தற்கொலை!

Jeba Arul Robinson