செய்திகள் சினிமா

தனிமரமாக நிற்கும் 90s கிட்ஸ்களின் கேள்விக்கு விக்னேஷ் சிவனின் பதில்!

தனக்கு பின்னர் வந்த 2K கிட்ஸா இருந்தாலும் சரி, தனக்கு முன்னர் பிறந்த 80’s கிட்ஸ்ஸாக இருந்தாலும் சரி திருமண அழைப்பு வைத்தால் சலிக்காமல் சென்று மொய் வைத்து தன் பங்கிற்கு பந்தியில் மட்டும் சிறப்பாக ஃபர்பாம் செய்யும் 90’s கிட்ஸ்களின் நிஜ வாழ்க்கையோ நெரிஞ்சி முள்ளில் நடக்கும் பயணமே, அவர்களை வெறுப்பேற்றுவதில் சமூகம் ஒரு பங்குதான் என்றால் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் பங்கு பலமடங்கே எனலாம். ஆம் சில வருடங்களாகவே ஜோடி-ஜோடியாக insta பக்கத்தில் படங்களை பகிர்வதும் அதில் சோகமாக வாழ்த்துகள் கூறுவதுமே 90’s கிட்ஸ் வாடிக்கை.

எதிரில் அமர்ந்திருக்கும் பெண்களின் சடையை பற்றி இழுத்த 90’s கிட்ஸின் கைகள் தற்போது, ஊருக்குள் யார் யாருக்கு திருமணம், வைபவம், யார் யாருடன் ஜோடியாக சுற்றுகிறார்கள், இணையத்தில் யாருடனாவது வம்பு இழுப்பது என கால் நூற்றாண்டை கடத்தி விட்டார்கள். காண்டான 90s கிட்ஸின் ஒருவர் சமீபத்தில் விக்னேஷ் சிவனிடம் நயன்தாராவுடனான திருமணம் குறித்து இன்ஸ்டாவில் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு கூலாக பதிலளித்த 80’s கிட்ஸ்ஸான சிவன், “கல்யாணத்திற்கு செலவு கொஞ்சம் ஆகும் ப்ரோ. கொரோனா முடிஞ்சவுடன் கல்யாணம் நடத்திடலாம்” என பதிலளித்துள்ளார்.

வகுப்பறைகளில் முட்டையை திருடி தின்ற ஒரு தலைமுறை, இன்னைக்கு சோஷியல் மீடியாவில் ஹாய், ஹலோ சொல்லக் கூட தோழிகள் இல்லாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். திருமண யோகத்தை மழையென வான் நோக்கி காத்திருந்த நிலையில், கொரோனா அலை அலையாக வந்து 90’s கிட்ஸ்களின் கனவுகளை வெள்ளமென அடித்து சென்றுவிட்டது என்னமோ சற்று வருத்தமளிப்பதாகதான் உள்ளது. 2k கிட்ஸ்கள் திருமணம் செய்து கொண்டிருக்கும், 80s கிட்ஸ்களுக்கு திருமணமாகியுள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்று சோதனையாக வந்துள்ளது.

Advertisement:

Related posts

த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

Jeba Arul Robinson

விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசும் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்! – முதல்வர் பழனிசாமி

Nandhakumar

’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்

Gayathri Venkatesan