முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி(94) வயது மூப்புகாரணமாக காலமானார்.

சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. நடனத்திற்கு பேர்போன இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். தமிழ் சினிமாவின் அந்த காலம் முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் சேர்ந்து நடித்துள்ளார்.

கமல் ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு ,மண்வாசனை போன்ற படங்களில் நடித்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி கடைசியாக வேலைக்காரன், எதிர்நீச்சல், கயல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

வயது மூப்புகாரணமாக பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலமானார் இவரின் இறப்பிற்கு திரைத்துறையில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மழைபாதிப்பு பகுதிகளில் ’நடமாடும் மருத்துவ குழுக்கள்’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

Arun

இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!

Dhamotharan

பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!

Vandhana