முக்கியச் செய்திகள் தமிழகம்

பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

பழங்குடியின பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மட்டுமே பாடம் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், பழங்குடியின பகுதிகளில் உரிய வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எழில் ஓவியா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,“தமிழகம் முழுவதும் சுமார் 225 பழங்குடியினர் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் அவை அனைத்தும் மூடப்பட்டதால், அங்கு படித்துவந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் பழங்குடியினரின் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு அவர்கள் வசிக்கும் இடங்களில் போதிய வசதிகள் இல்லாததால் அவர்கள் கல்வி கற்பது கேள்வி குறியாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, “பழங்குடியின மக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்த போதிய வசதிகள் அப்பகுதியில் இல்லை. எனவே பழங்குடியினர் மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்க சமுதாய சமையலறை மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை கொரோனா சிகிச்சை நிலையமாக அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement:

Related posts

பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!

Karthick

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ விவகாரம்; உதயநிதி ட்வீட்!

Karthick

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Niruban Chakkaaravarthi