போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…

தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியே வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. அண்ணா தொழிற்சங்க பேரவை தனியே வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.