சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. சிக்கிமின் காங்டாக் பகுதியில் இன்று அதிகாலை 2.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.53 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேற்கு கமெங் பகுதியில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.09 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.09 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இந்தியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.