மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி!

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன் மூலம் இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து வரும் 5ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.