அமோனியா வாயுகசிவு விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

அமோனியா வாயுகசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், கடந்த ஜூன் 21ம் தேதி குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்து விபத்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதனிடையே அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது.

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த அலத்தி மகாராணா ஜுவாங்கா (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 17 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.