கோவில் திருவிழாவில் சோகம்; 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபர்

வத்திராயிருப்பு அருகே 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபரும், காயமடைந்தவர்களும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று…

வத்திராயிருப்பு அருகே 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபரும், காயமடைந்தவர்களும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் கிராம மக்கள் சார்பில் ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளனர். இந்த நிலையில் ஆனந்த் என்ற வாலிபர் மது போதையில் பாட்டை நிறுத்த சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இந்த தகராறில், ஊர் நாட்டாமை முத்தையா (47) சேகர் (44), ராம்குமார்(19), சுந்தரமூர்த்தி (36), கருப்பசாமி ஆகிய 5 பேரை மதுபாட்டிலால் நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்திய நிலையில் படுகாயம் அடைந்த 5 பேரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த ஊர் நாட்டாமை முத்தையா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து மனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த 2வயது சிறுவன் உயிரிழப்பு’

இந்நிலையில், 5 பேரைக் குத்திய ஆனந்த் அதே வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவமனை சுற்றிப் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், போலீசார் ஆனந்த்தைக் கைது செய்து தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். குத்திய ஆனந்த் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.