தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த 2வயது சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த 2வயது சிறுவன், உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே எலவமலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான முருகன்,…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த 2வயது சிறுவன், உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே எலவமலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான முருகன், கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இன்று காலை வீட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

ஆனால், திடீரென வந்த சத்தத்தைக் கேட்டு தாய் ரேவதி பதரி அடித்துக்கொண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்று போய் பார்த்துள்ளார். அப்போது, குழந்தை ஸ்ரீநேஷ் வீட்டிலிருந்த தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘’மஞ்சப்பை நோக்கி பின் சென்றாலும் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’ – அமைச்சர் மா.சுப்ரமணியன்’

உடனடியாக குழந்தையை எடுத்துக் கொண்டு பவானி அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் குழந்தை ஏற்கனவே உயிர் உண்டு விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்தச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.