கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில்
இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் அருகில் உள்ள சித்தரசூரை சேர்ந்தவர் நாராயணசாமி . இவர் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள தம்பிபேட்டை பாளையத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. கொத்தனார் தொழிலாளரான இவர் வேலை முடிந்து பாலூர் அருகே வீட்டிற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் சைக்கிள் பஞ்சரானதால் அந்த வழியாக வந்த நாராயணசாமியிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருவரும் நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன்கோவில் அருகில் வரும் போது அதே திசையில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார்.அப்போது டிராக்டரில் பைக்கின் பின்னால் கட்டப்பட்டிருந்த சைக்கிள் இடித்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பைக் மீது டிராக்டர் ஏறியதில் நாராயணசாமி ,ஏழுமலை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்