திமுகவிலிருந்து கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் நீக்கம்

கடலூர் திமுக எம்.எல்.ஏ., அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கடலூர் திமுக எம்.எல்.ஏ., கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்…

கடலூர் திமுக எம்.எல்.ஏ., அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடலூர் திமுக எம்.எல்.ஏ., கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக திமுக வில் மாற்று வேட்பாளரை அய்யப்பன் நிறுத்தியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சியினர் யார் தவறு செய்தால் நடவடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.