முக்கியச் செய்திகள் தமிழகம்

சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம்

மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மழைக்கால நோய் பாதிப்புகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

45 சுகாதார மாவட்டங்களில் இருந்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 36 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுகாதாரத் துறைச் செயலாளர் செந்தில் தற்பொழுது டெங்கு ஒழிப்பை எப்படி மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது டெங்கு எந்த அளவிற்கு தமிழ்நாட்டில் பரவி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் போன்ற ஆலோசனைகளை பற்றி மருத்துவ முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேசினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 95.96 % முதல் தவணை தடுப்பூசியும், 89.44 % பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

டெங்கு, மலேரியா டைபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் 2017 ல் தான் அதிகபடியானவர்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் 10,136 பேர் தமிழகத்தில் மரணம் அடைந்துள்ளனர். 85 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெற்று இருக்கிறார்கள்,
1.5 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.

25 ஆரம்ப சுகாதார நிலையம், 25 சுகாதார நிலைய ம் என மொத்தமாக 50 சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன. அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட இருக்கிறார்.

தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தால் தற்போது அறுவதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது.

மிக விரைவில் தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கொசு மருந்து அடிப்பது புகை மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளை 365 நாட்களும் செயல்படவில்லை என்றாலும் கூட மழைக்காலங்களில் இது போன்ற பணியை தமிழக அரசு செய்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை விவசாயத்திலும் போது ஏற்படக்கூடிய மழை என அனைத்துமே சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.

2017 யில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பை போன்ற இனி எப்போதும் டெங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது, 2017 தான் தமிழகத்திற்கு ஏற்பட்ட கரும்புள்ளி என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

முன்னதாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை கடந்த மாதமே உத்தரவிட்டிருந்தது.

அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும். நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும். வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் கழிவுகளை அகற்ற அறிவுறுத்த வேண்டும்.

குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு-பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை

Web Editor

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது; முதல்வர் விமர்சனம்

G SaravanaKumar

கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

Halley Karthik