விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சூர்ய உதயம் காணவும், சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் மகர விளக்கு பூஜை நெருங்குவதை ஒட்டியும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை . அழகும் கம்பீரமும் சங்கமிக்கும் இடமான இங்கே இயற்கை அதிசயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகளும் மனதைக் கவரும் காட்சியை வழங்கும் சுற்றுலா தளங்களும் உள்ளன. இவற்றை பார்ப்பதற்கு அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்பேற்பட்ட அதிசயங்களை கொண்ட கன்னியாகுமரியில் ஆண்டிற்கு இரண்டு சுற்றுலா சீசன்கள் வரும். ஒன்று கோடை விடுமுறை, இன்னொன்று சபரிமலை சீசன்களில் நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது. அந்த வகையில் தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர்.
இதுதவிர இன்று விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருந்து, முக்கடல் சங்கமிக்கும் கடல் நடுவே இருந்து சூரியன் உதிக்கும் கட்சியை கண்டு குதூகலம் அடைந்தனர்.
மேலும் சூரிய உதய காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். இதுதவிர சபரிமலை மகர விளக்கு பூஜை நெருங்குவதை ஒட்டி கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள ஐயப்ப பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் கடலில் இறங்கி நீராடி, அங்குள்ள பகவதி அம்மன்
கோவிலில் தரிசனம் செய்தனர்.