நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி அடைய வேண்டி மயிலாடுதுறை
மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் நூதனப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், பிராகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசைவெளீயிட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் 11ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
வாரிசு திரைப்படம் இன்னும் இரு தினங்களில் திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இன்று விஜய் ரசிகர்கள் மயூரநாதர் அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தஞ்சை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.







