தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். இதே போல திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை துவக்கி வைக்க உள்ளார்.








