குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!

குளித்தலை, பெரியபாலத்தில் உள்ள நீர்வள துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தில் தென்கரை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறக்க கோரிக்கை மனு வழங்கியதை அடுத்து வரும் 8ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.…

குளித்தலை, பெரியபாலத்தில் உள்ள நீர்வள துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தில் தென்கரை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறக்க கோரிக்கை மனு வழங்கியதை அடுத்து வரும் 8ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்றுவட்டாரம் பகுதிகளில் சுமார் 10,000 க்கும்
மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அதில் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். வருடாந்தோறும் ஜனவரி மாதம் 30 நாட்கள் மட்டுமே விவசாய பாசனத்திற்கு இல்லாமல் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்படும். தற்பொழுது, விவசாயம் செய்யப்பட்ட  பயிர்கள் அனைத்தும் கடந்த மூன்று மாதமாக தண்ணீர் திறக்கப்படாமல் அதிக அளவு காய்ச்சல் ஏற்பட்டு பல கோடி அளவில் சேதமடைந்துள்ளது.

தண்ணீர் திறக்க பலமுறை கோரிக்கை மனு அளித்தும் தண்ணீர் திறக்காததால், சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டுமென பெரியபாலத்தில் உள்ள நீர்வளத் துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட
அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து, நாளை  தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

—ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.