முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

ரூ.50க்கு கீழ் குறைந்தது தக்காளி விலை

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை 50 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.

தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டு 2 வாரங்களாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. 150 ரூபாயை தக்காளி விலை தொட்டதால், நியூஸ் 7 தமிழ் சார்பில் நேற்று முழுவதும் கள ஆய்வு நடைபெற்றது. தக்காளி விலை ஏற்றம் குறித்தும், விவசாயிகளின் கருத்து குறித்தும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் மாநிலம் முழுவதும் களத்தில் இறங்கி கள நிலவரங்களைப் பதிவு செய்தனர்.

விலையேற்றத்திற்கு காரணம் என்ன? இடைத்தரகர்களின் லாப நோக்கமா? விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டு சந்தையில் தக்காளி விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 100 ரூபாய் குறைந்து 50 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும், தேக்கி வைத்திருந்த காய்கறிகள் வந்ததால், தக்காளி விலை குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் பண்ணை பசுமை சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்: எஸ்.பி.வேலுமணி கோரிக்கையையடுத்து முதல்வர் அறிவிப்பு!

Halley karthi

கொரோனா ஊரடங்கு ஓராண்டு: ஊரடங்கில் அதிகரித்த மாணவர்களின் இடைநிற்றல்

எல்.ரேணுகாதேவி

ஒலிம்பிக் போட்டி: டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்கள்

Vandhana