மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

மழை பாதிப்பு நிவாரணமாக 4 ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க 2 ஆயிரத்து…

மழை பாதிப்பு நிவாரணமாக 4 ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க 2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்சம் ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், புதிய கணக்கெடுக்கப்பின்படி, சேதங்களை சீரமைக்க கூடுதலாக ஆயிரத்து 996 கோடியே 50 லட்ச ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ஆயிரத்து 70 கோடியே 92 லட்ச ரூபாயும், நிரந்தர சீரமைப்புக்கு 3ஆயிரத்து 554 கோடியே 88 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4 ஆயிரத்து 625 கோடியே, 80 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.