முக்கியச் செய்திகள் இந்தியா

மிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

மிசோராம் மாநிலம், தென்சால் பகுதியில் அதிகாலை 5.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சாலில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதேபோன்று, வங்கதேசத்தின் இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் மையம் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதியான சிட்டகாங்கில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட நிலநடுக்கம் 6.3ஆக பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பாடலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்

Saravana Kumar

“2,000 ரூபாய் நோட்டை பார்த்ததே இல்லை” – நூதன கொள்ளை

Saravana Kumar

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரவுண்ட் அப்

Niruban Chakkaaravarthi