முக்கியச் செய்திகள் இந்தியா

ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி

முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எட்டு மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தேவையான நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை பணியமர்த்துகிறது.

முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை சேர்பதற்கான மிகப்பெரிய அளவிலான ஆட்சேர்ப்பை நடத்துகிறது. இதற்கு முன்புவரை, போக்குவரத்துக் கழகங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் பதிவு மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை பணியமர்த்தப்பட்டனர். கடைசியாக, 2014-2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் டிரைவர், கண்டக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேவையான காலியிடங்களின் சரியான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப வல்லுநர், இளநிலை உதவியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சுமார் 10,000 பணியிடங்களை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்ட அறிக்கையை நிதித் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துறை ஒப்புதல் கிடைத்தவுடன், ஆட்சேர்ப்பை டிஎன்பிஎஸ்சி தொடங்கும் என கூறப்படுகிறது. ஜனவரியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் செயல்பாடுகள்) சட்டம், 2022 மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி’

நவம்பர் 2019 இல், மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கனரக மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை மாநில அரசு நீக்கியது. “ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குறைந்தபட்ச கல்வி மற்றும் வயது தகுதியை துறையின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்யும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என சொல்லப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் அதிக பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பேருந்து வழித்தடங்களை ஆய்வு செய்து அதனை நடைமுறை படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தற்போதைய தேவை குறித்து சிஐடியு-ஐ சேர்ந்த போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தைச் சேர்ந்த ஆறுமுக நயினார் கூறுகையில், மாதம் குறைந்தது 30 தொழிலாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இந்த நடவடிக்கை ஆட்சேர்ப்பை வெளிப்படையானதாக மாற்றும் என நம்புவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் திருட்டை குறைக்க ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்த நடவடிக்கை!

Jayasheeba

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?

Vandhana

ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையிலும் தங்கம் கண்டுபிடிப்பு

Dinesh A