தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றது. அந்த தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. அதன்படி 685 பேர் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளின் படி நாட்டில் முதல் மாணவியாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுருதி சர்மா இடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்பவர் இந்திய அளவில் 42வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இதேபோல, சென்னையைச் சேர்ந்த எஸ்.சிவானந்தம் தனது முதல் முயற்சியிலேயே 87வது ரேங்க் பெற்றுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை’
685 பேர் தேர்வு எழுதிய நிலையில், 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020 இல் 781 பேரில் 45 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த 2-3 ஆண்டுகளில், தமிழில் தேர்வு எழுதியவர்களில் ஓரிருவர் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுமுடிவுகள் காட்டுகிறது.
மேலும், துறைசார்ந்த வல்லுநர்கள் தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்கையில், உடனடியாக வேலை வேண்டும் என்று நினைகிறார்கள் ஆனால், அதற்கான காத்திருப்பு அல்லது பெரிய முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வது இல்லை. 2 இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் படிப்பதில்லை, குறைந்த பட்சம் 6-7 ஆண்டுகளாவது பயிற்சி மட்டுமே வெற்றியை கொடுக்கும் என தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.