தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதிக வாக்கு மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எத்தனை பேர் வென்றுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில் பாமக வேட்பாளர் திலக பாமா 2வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் ஐ. பெரியசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் 50 ஆயிரம் வாக்குகள் தொடங்கி ஒரு லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 80 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசல் 57 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 33 பேர் வெற்றி மாலை சூடியுள்ளனர்.
100 முதல் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 8 பேர் தம்மை எதிர்த்த வேட்பாளரை அதிர்ச்சித் தோல்வி அடைய வைத்துள்ளார்.







