தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சடப்பேரவைத் தேர்தலுக்காக விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து ஐந்து மாநிலங்களிலும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவது, சலுகை அறிவுப்புகளை வெளியிடுவது, அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து புதிய அரசுகள் பதவி ஏற்க உள்ளன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதை விலக்கிக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்பான தடுப்புபணிகளை மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளில் இருந்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே விலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.