அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுகிறது.
அமமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று இரவு இறுதிச் செய்யப்பட்டது. இதனையெடுத்து தேமுதிக கட்சிக்கு 23 தனித் தொகுதிகள் உள்பட 60 தொகுதிகள் அமமுக ஒதுக்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தேமுதிக தனித்து போட்டியிடவுள்ளதாக அப்போது அறிவித்தது. பின்னர் தேமுதிகாவை கூட்டணியில் இணைக்க மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் மக்கள் நீதி மய்யத்தடன் கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. இதனைத்தொடர்ந்து நேற்று அமமுக துணைப் பொதுச் செயலர் ஜி.செந்தமிழன், தேமுதிக அவைத் தலைவர் வி.இளங்கோவன் இருவரும் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் முடிவில் அமமுக தேமுதிகாவிற்கு 60 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார். தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது.







