மியான்மர் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் மியான்மர் ராணுவம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின்…

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் மியான்மர் ராணுவம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதில் போராட்டக்காரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணைய நிபுணர் தாமஸ் அண்ட்ரூஸ் கூறுகையில் , ’மியான்மர் போரட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்’ என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகச் சர்ச்சை எழுப்பப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி முதல் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.