கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள…

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் வூகான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து வந்த அவருக்குத்தான் முதன் முதலாக நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. படிப்படியாக தொற்று வேகம் அதிகரித்தது. இதனை தடுக்கும் நோக்கில், ஊரடங்குகள் போடப்பட்டன.

இதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரம் பாதித்தல், வேலையை இழத்தல், வேலைவாய்ப்பு குறைபாடு விகிதம் அதிகரிப்பு, சிறு குறு தொழில் அழிவு, பண இழப்பு, கல்வி பாதிப்பு, வறுமை போன்ற பல சிக்கல்களை மக்கள் சந்தித்தனர். இதில், முக்கியமாக குழந்தைகளின் நலன் காக்க ஆன்லைன் கல்வி முறை செயல்படுத்தப்பட்டது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பல குழந்தைகளுக்கு இந்த ஆன்லைன் கல்லி முறை கிடைக்காமல் போனது. பல குழந்தைகள் தனது கல்லிவை இழந்தனர். மேலும், இந்த ஆன்லைன் கல்வி கற்ற முடியாமல் தனது கல்வியை விட்டதால் பல மாணவர்கள்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்று, பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்பட சில காரணங்களினால் பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை பள்ளிக் கல்வித் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டது. இதை சரிக்கட்டும் வகையில், பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்து 2 ஆயிரத்து 714 மாணவர்கள், 74 ஆயிரத்து 606 மாணவிகள், 2 திருநங்கைகள் என்று மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 320 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் அவரவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.