நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா என்பது குறித்தும் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை வரும் 24-ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.
ஜனவரி 24-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அன்றைய தினமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சம்மந்தமான அறிவிப்பாணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.